குறுக்கு வழி அதிகாரப் பகிர்வு நிலையான சமாதானத்தை தராது – நாமல் எம்.பி. விளக்கம்

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத்திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல் அரசியலமைப்பிலும்கோட்டை விட்டுவிடக்கூடாது என கூட்டு எதிரணி எம்.பியான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாவலப்பிட்டி  நகரில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தஅலுத்கமகே தலைமையில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அவசர அவசரமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கு சுமந்திரன் குழு முயற்சித்து வருகிறது. புதியஅரசியலமைப்பில் ஒற்றையாற்சி நாடாகவே இலங்கை இருக்கும் என பிரதமர் தரப்பு சிங்கள மொழியில் கூறி வந்தாலும் அதற்கு மாற்றமான ஒரு கருத்தினை சுமந்திரன் கூறிவருகிறார்.

அவசரமாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெரும்பான்மை மக்களின் பூரணவிருப்பத்துடனேயே சிறுபான்மை மக்களுக்கு அதைகாரம் பங்கீடுசெய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் அதிகார பகிர்வைசெய்தால் அது ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாது.

தமிழ் கூட்டமைப்பு அரசியலமைப்பை எவ்வாறாவதுநிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற விடாப்பிடியாக உள்ளது.இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சி தலைவர்கள் மிகவும் கரிசனைஎடுத்துக்கொள்ளவேண்டும்.மாகாண சபை திருத்த சட்டத்தில் விட்ட தவறை   அரசியலமைப்பில்விடக்கூடாது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *