எனது வலது கையை இழந்துவிட்டேன் – அருள்சாமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் ஆயிரத்தை வென்றெடுக்க வேண்டும் – கண்ணீர்மல்க தொண்டா சபதம்!

இ.தொ.காவின் உபதலைவராக செயற்பட்ட அருள்சாமியின் மறைவானது எனது வலது கையையே இழந்ததுபோல் உணர்கின்றேன்யு என்று இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்மான் எம்.பி. கண்ணீர்மல்க கவலை வெளியிட்டார்.

மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின் பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று (07) மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அமரர். அருள்சாமி தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களின் நலனைக்கருதியே அரசியலையும்,  தொழிற்சங்க நடவடிக்கையையும் முன்னெடுத்தார்.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலும் முக்கிய வகிபாகத்தை வகித்தார். இன்று அவரின் மறைவால் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறுகின்றேன்.

இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள கூட்டு ஒப்பந்த பேச்சில் எவ்வாறு கலந்துகொள்ளப்போகின்றோம் என தெரியவில்லை. அவரின் மறைவால் கதிகலங்கி நிற்கின்றோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களிடமிருந்து ஆசீர்வாதம் எனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிடைத்தது போல மறைந்த அருள்சாமியின் ஆசீர்வாதமும்  கிடைக்கும் என நம்புகின்றேன்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தை மனதில் தாங்கி உயிர் நீத்த இவரின் ஆத்ம சாந்தியடைய வேண்டும் என்றால் , ஒற்றுமையை பலப்படுத்தி நம்பிக்கையுடன் மக்கள் இருக்கும் பொழுது, நிச்சியமாக சம்பள உயர்வு கிடைக்கும் என்பதில் எந்தவொரு அச்சமும் இல்லை.

ரின் ஆத்ம சாந்தியடைய கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து சம்பள உயர்வை பெற்றே தீர வேண்டும் என்று தனது இரங்கலில் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *