நடுவீதியில் இளம் பெண் வெட்டிக்கொலை – கள்ளக் காதலனின் தந்தை வெறியாட்டம்!

தமிழகத்தின், அம்பை அருகே பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் விஜி என்ற சுந்தரி (வயது 37).
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேல் மகன் நாலாயிரத்துக்கும் (40) இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதில் சுந்தரிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் நாலாயிரத்துக்கு பிறந்த குழந்தைகள் என்றும், தனக்கும், குழந்தைகளுக்கும் நாலாயிரம் உதவ வேண்டும் என்றும் சுந்தரி கேட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நாலாயிரம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அம்பையில் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை சுந்தரியும், அவருடைய தங்கை ராமலட்சுமியும் (32) பிரம்மதேசத்தில் உள்ள நாலாயிரத்தின் தந்தை சண்முகவேல் வீட்டுக்கு சென்று தனக்கும், தனது 2 குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் சண்முகவேல் உதவி செய்ய மறுத்ததால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த சண்முகவேல், சுந்தரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதை தடுக்க முயன்ற ராமலட்சுமியையும் அவர் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் நடுவீதியில் விழுந்து கதறினர்.

சிறிது நேரத்தில் சுந்தரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். படுகாயம் அடைந்த ராமலட்சுமி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அம்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *