சந்திரிக்காவுடன் கரம்கோர்த்த ரெஜினோல்ட் குரேவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி – இனி ஆளுநர் பதவி இல்லை!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஜனாதிபதியால் மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படமாட்டாது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரெஜினோல்ட் குரே, சந்திரிக்கா அம்மையாரின் ஆலோசனையின் பிரகாரம், ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் 23 உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள ரெஜினோல்ட் குரேயின் இல்லாத்தில் அண்மையில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.  இதையடுத்தே சுதந்திரக்கட்சியின் தலைமையகம்கூட இழுத்து மூடப்பட்டிருந்தது.

குறித்த இரகசிய சந்திப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிலிகொள்ள வைத்தது. இதனால், கடுப்பாகிய அவர், ரெஜினோல்ட் குரேவுக்கு ஆப்பு வைப்பதற்காக அனைத்து ஆளுநர்களையும் பதவி துறக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

தற்போது எட்டுமாகாணசபைகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்துக்கும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்துக்கு மட்டுமே இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியிடம் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக மன்னிப்புகோரும் பட்சத்திலேயே அவருக்கு அப்பதவி வழங்கப்படலாம்.

அவ்வாறு இல்லையெனில் பெண்ணொருவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்க்பபடுகின்றது. எனினும், மன்னிப்பு கேட்கும் நிலைப்பாட்டில் குரே இல்லையென கூறப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *