நாளை கூடுகிறது அரசமைப்பு சபை!

அரச உயர் பதவிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும், அரசமைப்பு சபை நாளை கூடவுள்ளது.

இதன்போது உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பாக ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஏற்கனவே நீதியரசர் ஈவா வணசுந்தர பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் உயர்நீதிமன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நீதியரசர்களை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இருவரின் பெயர்களை ஜனாதிபதி சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.

காமினி அமரசேகர மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களின் நியமனங்களுக்கு அரசியலமைப்பு சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும் இன்னும் குறித்த இரண்டு பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசமைப்பு  சபையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *