1815 இல் பறிபோன கண்டி இராஜ்ஜியமும் அறிமுகமான கோப்பி பயிர் செய்கையும்

1815 ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர். அதன் பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது.

இந்நிலையில் 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளைவரை விரிவுபடுத்தப்பட்டது.

1867 இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவர் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை மலையகத்தில் தேயிலை பயிர்செய்கையே பிரதான பொருளாதார வருமானமாக இருந்துவருகின்றது.
.

1820 – இல் கோப்பி பயிர்செய்கை ஆரம்பம்.

1827 – கோப்பி பயிர்செய்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து முதலாவது தொழிலாளர் வருகை.

1824 தொடக்கும் 1956 வரை கோப்பி பிரதான ஏற்றுமதி பண்டமாகியது.
1865- கோப்பி பயிர் நோயின் தாக்கத்துக்கு உட்படல்.

1867- ஜேம்ஸ் டெய்லரால் தேயிலை பயிர் பயிரிடப்பட்டது.

1883- முதன்முதல் 53 இறாத்தல் தேயிலை ஏற்றுமதி.

(தகவல்மூலம் – MEIL 2006-2015
நன்றி- ISD)

அதேவேளை, தேயிலை பயிர்ச்செய்கையின் இன்றைய நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

பெருந்தோட்டங்களில் பல பகுதிகள் காடாக காட்சியளிக்கின்றன. மீள்பயிரிடலும் குறைவாகவே இடம்பெற்றுவருகின்றது.

ஆனால், முன்னர் தேயிலைத் தோட்டங்களை பராமரிப்பதற்கு முன்னர் தனிப்பிரிவொன்றே இருந்தது. உரிய காலப்பகுதியில் கவ்வாத்து வெட்டப்படும். மீள் நடுகையும் உரிய வகையில் சூழற்சி அடிப்படையில் இடம்பெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *