கம்பெரலிய திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி!

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கம்பெரலிய (ஊரெழுச்சி) வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (02)  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

முதலில் அமைச்சர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

அதன்பின்னர் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை தொடர்பில் ஆராயப்பட்டன. இதன் ஒரு அங்கமாகவே கம்பெரலிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கம்பெரலிய வேலைத்திட்டத்தை நிதி அமைச்சின் ஊடாக ஐக்கிய தேசிய முன்னணி அரச முன்னெடுத்துவந்தது.

ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சிமூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *