புத்தாண்டில் 3 இலட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு! முதல் குழந்தை பிறந்த நாடு எது தெரியுமா?

2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன.
புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பு (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேச நாடுகளில் பிறந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளது.
பாகிஸ்தானில் 15 ஆயிரத்து 112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 256 குழந்தைகளும்,அமெரிக்காவில் 11 ஆயிரத்து 86 குழந்தைகளும், காங்கோவில் 10 ஆயிரத்து 53 குழந்தைகளும், வங்க தேசத்தில் 8 ஆயிரத்து 428 குழந்தைகளும் பிறந்துள்ளது.
சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளது. டோக்கியாவில் 310 குழந்தைகளும், பெய்ஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளது.
புத்தாண்டு பிறந்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில்  2019-ம் ஆண்டும் இந்தியாவே சாதனை படைத்துள்ளது.  கடந்த ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *