ஹட்டனில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது கோழி லொறி – சாரதி படுகாயம்!
ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் – கிளங்கன் பகுதியில் வைத்து லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கண்டியிலிருந்து பொகவந்தலாவிற்கு கோழி ஏற்றிச்சென்ற லொறியே நேற்றிரவு 10 மணியளவில் பாதையை விட்டுவிலகி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா