யார் இந்த நாமல் குமார? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!

நாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை இராணுவத்தில் இணைந்தவர் என்றும், பயிற்சியின்போது  தப்பிச்சென்றவர் என்றும் சி.ஐ.டியினர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இராணுவம் மற்றும் விமானப்படையில் இணைவதற்காக நாமல் குமார, போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் சி.ஐ.டியினர் தெரியப்படுத்தினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தை கொலை செய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது என்றும்,

இதன் பின்னணியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்புபட்டுள்ளார் என்றும் நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து இவ்விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏன்! ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த பிரதான காரணிகளுள் இதுவும் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *