8 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம் – எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு  எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

புதிய பிரதமர் நியமிப்பு,  நாடாளுமன்றம் கலைப்பு உட்பட மேலும் சில விடயங்களால் 2018 இறுதியாண்டு காலப்பகுதியில் நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியது. அதிஉயர் சபையான நாடாளுமன்றத்திலும்கூட அடிதடி ஏற்பட்டது.

இதனால், பெரும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலேயே சபை அமர்வுகளை முன்னெடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. 2019 ஆம் நிதியாண்டுக்காக டிசம்பரில் நிறைவேற்றப்படவிருந்த வரவு – செலவுத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

இடைக்கால கணக்கறிக்கை மட்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சைக்கும், சபாநாயகர் சட்டபூர்வமாக முற்றுப்புள்ளிவைக்கவில்லை.

எனவே, 8 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தனது நிலைப்பாட்டை சபைக்கு சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டரசிலிருந்து விலகியுள்ளதாலும், மஹிந்த ராஜபக்ச  இன்னும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உறுப்பினராக அங்கம் வகிப்பதாலும் அவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *