2019 இலும் ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி வாள்வீச்சு பயணம்!

2019 ஆம் ஆண்டு ஊழல் இல்லாமல் சேவையாற்றும் வருடமாக பெயரிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டி, தலதா மாளிகைக்கு இன்று ( 31) ஆன்மீக பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” வறுமையை ஒழித்து, வளமான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். மலரும் புத்தாண்டை ஊழல் இல்லாமல் பணியாற்றக்க கூடிய ஒரு வருடமாக மாற்றியமைக்கவேண்டும்.

உலகில் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்லுகின்ற நாடுகளைப்பார்க்குமிடத்து எமக்கு எவ்வளவு பாரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் சகல பிரஜைகளும் இது எமது நாடு என்ற அடிப்படையில் தமது மனற்சாட்சிக்கு ஏற்ப கருமமாற்றுவது முக்கியமாகும்.” என்று குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக தான் வாள்வீச்சு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அறிவித்திருந்தார். அதன்பின்னர் அரசியல் களத்தில் ‘வாள்வீச்சு’ என்ற சொற்பதம் ஹிட்டானது.

இந்நிலையில்தான், மலர்ந்துள்ள புத்தாண்டை ஊழல்அற்ற ஆண்டாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி இறங்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *