2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் தெஹிவளையில் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் இருந்து 200 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பின்னர் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *