உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்

நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது.
இலங்கையைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில், இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் (அங்கு நள்ளிரவு 12 மணி) 2019-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புதிய ஆண்டு பிறந்ததால் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என அந்நாட்டு மக்கள் கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தனர்.
கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.  நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி  அங்கு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
மேலும், இந்திய நேரப்படி நியூசிலாந்துக்கு அடுத்தப்படியாக இன்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாட காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *