Uber இலங்கையில் அறிமுகப்படுத்தும் காப்புறுதி மற்றும் பாதுகாப்புக் கருவிகள்!

• இப்போது பயனாளிகள் APP இல் இருந்தவாறே 119 ஐ நேரடியாக அடைந்து கொள்ளலாம்.

• திடீர் விபத்து, நிரந்தர அங்கவீனம், மருத்துவச் செலவினம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்பு ஆகிய அனைத்தையும் பயனாளிகள் மற்றும் சாரதி பங்காளிகள் காப்புறுதி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

உலகின் மிகப் பெரிய on-demand ride-sharing ஸ்தாபனமே Uber நிறுவனமாகும்.

இது, தொழிற்துறையில் முதல் முறையாக, தனது பயனாளிகளுக்கும் சாரதி பங்காளிகளுக்கும் பயணங்களின் போதான காப்புறுதித் திட்டத்தையும், சர்வதேச பாதுகாப்புக் கருவிகள் தொகுதியையும் அறிமுகம் செய்துள்ளது.

தெற்காசியாவின் 11வது மிகப் பெரிய நகரமான கொழும்பில் இதனை மேற்கொண்டுள்ளது. Uber இன் இவ்விரண்டு வசதிகளும் இலங்கை வரவின் மூன்றாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு தெற்காசியாவில் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் Tuk Tuk சந்தையில் அறிமுகமாகிறது.

இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, தெற்காசிய நகரங்களுக்கான Uber தலைவர் பிராப்ஜீட் சிங் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் மூன்று வருடப் பூர்த்தியைக் கொண்டாடுவதில் நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

எமது பயனாளிகள் மற்றும் சாரதி பங்காளிகளிடமிருந்து எமக்குக் கிடைக்கும் வரவேற்புக் குறித்து நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதுவரை கொழும்பு நகரில் 25,000 இற்கும் அதிகமான சாரதி பங்காளிகளுடன் நுண் தொழில் முயற்சி வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.

இந்தச் சந்தை மீதான எமது ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எமது பாதுகாப்பு கருவித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் காணப்படும் அவசரத் தேவை பொத்தான் ஊடாக அவசரத் தேவைகளையும், எந்தவித செலவுகளும் இன்றி காப்புறுதியையும் பயனாளிகளும் சாரதிகளும் Uber APP இனை பயன்படுத்தும் போது பெற்றுக்கொள்கின்றனர்.

எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் தொடர்ச்சியாக எமது சாரதி பங்காளிகளுடனும் பயனாளிகளுடனும் இணைந்து செயற்பட்டு எமது பயனாளிகளின் மிகப் பிரியமான பயண முறையாகவும் எமது சாரதி பங்காளிகளுக்கு கவர்ச்சிகரமான ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க நாம் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றோம்” என்று கூறினார்.

இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவி தொகுதியானது, தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட Uber APP பயனாளிகளுக்கு மிகச்சிறந்ததொரு அறிமுகமாகும்.

இதன் மூலம் Uber பயன்படுத்தும் இலங்கையர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கிறது. அது தொடர்பான விபரம் மற்றும் பயன்பாட்டு விபரங்கள் என்பனவற்றுடன் ஏற்கனவே காணப்பட்ட விடயங்களுடன் மேலும் பல அம்சங்களும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.

APP இன் Home Screen இல் பாதுகாப்புக் கருவித் தொகுதியை இலகுவாக அடையக்கூடியதாக இருப்பதோடு, சாரதி பயணத்தை ஏற்றுக்கொள்ளும் நொடியிலிருந்து பயணம் முடிவு வரை இது செல்லுபடியாகிறது.

இந்த அறிமுகம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அலியான்ஸ் இன்ஷீவரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேக்கா அலஸ்,

“கொழும்பில் மூன்று வருடங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள Uber க்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையின் மிகப் பெரிய சாதாரண காப்புறுதித் தீர்வு வழங்குநர் ஒருவரான அலியான்ஸ் நிறுவனம், எமது மிகச் சிறந்த காப்புறுதி அறிவை Uber வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் பாதுகாப்புத் தேவைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது நவீன காப்புறுதித் தீர்வுகள் மூலம் பயனாளிகள் மற்றும் சாரதி பங்காளிகள் மன நிம்மதியுடன் தமது பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

இன்று நாம் அறிமுகப்படுத்துபவை –

• பாதுகாப்புக் கருவித் தொகுதி

* பயனாளிகள், பாதுகாப்பு விடயங்களை APP இல் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட கடப்பாடுகள் மூலம் அறிந்துகொள்ளவும், எமது காப்புறுதிப் பாதுகாப்புகள் மற்றும் சமூக வழிகாட்டிகளை அடைந்துகொள்ளவும் முடிகிறது.

* இதன் மூலம் முக்கிய பாதுகாப்புத் தகவல்களையும், ஏனைய அம்சங்களையும் பயனாளிகள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அது மிகவும் வசதியான ஒரு விடயமாகுமென எமது பயனாளிகள் கூறுகின்றனர்.

* வாடிக்கையாளர்கள், எமது பாதுகாப்புக் கருவித் தொகுதிகள் மூலம் நம்பகமான தொடர்பு விபரங்கள் என்ற அம்சத்தை அடைந்துகொள்ள முடியும். இதன் மூலம் பயனாளியின் ஐந்து நெருங்கிய உறுப்பினர்களை உள்ளடக்கி அவர்களுடன் பயணங்கள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

* பயனாளிகள் தங்களது சகல பயணங்களையும் அல்லது இரவு நேரப் போக்குவரத்துக்களை மாத்திரம் அல்லது எந்தவொரு பயணத்தையும் என்ற வகையில் பகிர்ந்துகொள்ளவோ அல்லது அவ்வாறின்றி இருக்கவோ முடியும்.

• அவசர பொத்தான்
* நாம், எமது பயனாளிகளுக்கு அவசர பொத்தான் ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் 119 என்ற இலக்கத்தில் பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினை நேரடியாக அடைந்துகொள்ள முடியும்.
* இந்த வசதியானது, எமது பாதுகாப்புக் கருவித் தொகுதியின் குடையில் பாதுகாப்புக் கவசம் ஒன்றின் வடிவில் பொத்தான் ஒன்றாக காணப்படுகிறது. பயனாளிகள் அவசர வேளைகளின் போது உடனடியாக swipe செய்யும் வசதியை இது வழங்குகிறது.

• பயனாளிகளுக்கும் சாரதி பங்காளிக்கும் காப்புறுதி

* தொழிற்துறையில் முதல் முறையாக, பயனாளிகளுக்கும் சாரதி பங்காளிகளுக்கும் காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், திடீர் மரணம், நிரந்தர அங்கவீனம் மற்றும் Uber APP இனைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் திடீர் விபத்துக்களில் வைத்தியசாலை அனுமதி போன்றனவும் உள்ளடக்கப்படுகின்றது.

* வேறு எங்கும் கிடைக்காத இந்தக் காப்புறுதி வசதி அலியான்ஸ் லங்கா இன்ஷீவரன்ஸ் லிமிட்டெட்டிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. மேலும், இது சாரதி பங்காளிகளுக்கு எந்தவித மேலதிக கட்டணமும் இன்றி வழங்கப்படுகின்றது. இதனால் அவர்கள் மன நிம்மதியுடன் தங்களது தொழிலை சுயாதீனமாக மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள முடியும்.

Uber பற்றி

நம்பிக்கையான போக்குவரத்தை அனைவருக்கும் சகல இடங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே Uber ரின் இலக்காகும்.

2010 ஆம் ஆண்டில் நாம் மிகச்சிறிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதாவது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பயணத்தைப் பகிர்ந்துகொள்வது எவ்வாறு என்ற கேள்விக்கு பதிலைத் தேடும் வகையில் எமது சேவை ஆரம்பிக்கப்பட்டது.

எமது சேவை மூலம் 8 வருடங்களில் 10 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களை நாம் மக்களுக்கு வழங்கியுள்ளோம். பிற்காலத்தில் எமக்கு அதிகளவு பயனாளிகளை குறைந்தளவு வாகனங்களில் உள்ளடக்கி சூழல் மாசடைவையும் நெரிசலையும் இல்லாதொழிக்கும் பெரிய சவால்கள் எமக்கு விடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *