எனக்குத் திருமணமா? – மறுக்கின்றார் மஹிந்தவின் இளைய மகன் ரோஹித

தான் திருமண பந்தத்தில் இணையப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ, தனது காதலியான ரற்றியானாவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்கிறார் என செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் திருமணத்துக்கான அழைப்பிதழும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

தங்காலை, மெதமுலன – வீரகெட்டியவில் உள்ள ரன்ன ஹோட்டலில்  திருமணம் நடைபெறுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது போலியான தகவல் என ரோஹித குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில் இந்தத் தகவலை ரோஹித வெளியிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷவின் சகோதரர்களான நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ இன்னும் திருமணம் முடிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A fake invitation card is circulating regarding my wedding. Please note that the information on that is not true pic.twitter.com/KKRHJbmysp

— Rohitha Rajapaksa (@Rohitha_Chichi) December 29, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *