A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்!

2018 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு

முதலாம் இடம் – கலனி ராஜபக்ஷ (கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை)
இரண்டாம் இடம் – ரவிந்து ஷஷிக (கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி)
மூன்றாம் இடம் – ஹக்கீம் கரீம் (மாத்தளை சாஹிரா கல்லூரி)

பௌதிக விஞ்ஞானப் பிரிவு

முதலாம் இடம் – சத்துனி விஜேகுனவர்தன (கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம்)
இரண்டாம் இடம் – சமிந்து லியனகே (காலி ரிச்சட் கல்லூரி)
மூன்றாம் இடம் – தெவிந்து விஜேசேகர (கொழும்பு றோயல் கல்லூரி)

வர்த்தகப் பிரிவு

முதலாம் இடம் – கசுன் விக்ரமரத்ன (குருணாகல் மலியதேவ வித்தியாலயம்)
இரண்டாம் இடம் – உச்சினி ரணவீர (கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை)
மூன்றாம் இடம் – மலிதி ஜயரத்ன (கொழும்பு மியுசியஸ் கல்லூரி)

கலைப் பிரிவு

முதலாம் இடம் – சேனாதி தம்யா டி அல்விஸ் (பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை)
இரண்டாம் இடம் – எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி (குருணாகல் மகளிர் மகா வித்தியாலயம்)

மூன்றாம் இடம் – பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி (கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை)

பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவு

முதலாம் இடம் – மஹா பத்திரனலாகே பமுதித்த யசாஸ் பத்திரன (கொழும்பு ஆனந்தாக் கல்லூரி)
இரண்டாம் இடம் – சமரநாயக்க தரிந்து ஹெஷான் (கொழும்பு ஆனந்தாக் கல்லூரி)
மூன்றாம் இடம் – முதியன்சலாகே சேஷான் ரங்கன விஜேகோன் (நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய பாடசாலை)

தொழில்நுட்பவியல் பிரிவு

முதலாம் இடம் – சந்துனி பியுமாஷா கொடிப்பிலி (கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம்)
இரண்டாம் இடம் – மொஹிதீன் பாவா ரிஸா மொஹமட் (சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்)

மூன்றாம் இடம் – அலங்காரகே விசிந்து டிலென்க லக்மால் (ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்)

இந்தத் தடவை பரீட்சையில் சித்தியடைந்த 1,60,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தகுதிபெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனப் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112 78 42 08 / 011 2 78 45 37 / 011 31 88 350 அல்லது 011 3 14 03 14 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *