அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலி!
அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் அரிசோனாவில் இருந்து டெக்சாஸ் வரை கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் கனமழை பெய்ய கூடும். வளைகுடா கடலோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும்.

டகோடாஸ், மின்னசோட்டா, கான்சாஸ் மற்றும் அயோவா நகரங்களில் பல இடங்களில் கடந்த வியாழ கிழமை சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிசெய்யும் பணிகள் நேற்று நடந்தன.
இந்த பனிப்புயலால் அமெரிக்காவில் 7 பேர் பலியாகி உள்ளனர் என ஊடக தகவல் தெரிவித்துள்ளது.