72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்த வீரர்கள்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 443 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

292 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2 வது இன்னிங்சை தொடங்கியது.

கம்மின்ஸ் வீசிய 13 வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து 3 வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4 வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5 வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6 வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5)

– ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6 ஆம் நிலை வரை களம் இறங்கும் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியது கிடையாது.

நான்கு பேரும் சேர்ந்து 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ஓட்டங்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

இதற்கு முன் 1946 இல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரர்க் (3 முதல் 6 வரை) 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

அதன்பின் தற்போதுதான் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

1969 இல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ஓட்டங்களும், 1983 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 9 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *