ஒத்திவைக்கப்பட்டது ஐ.தே.க. மத்தியசெயற்குழுக் கூட்டம்!
இன்று (27) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் அடுத்தவாரம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வடக்கு பயணத்துக்கான ஏற்பாடுகள் உட்பட மேலும் சில காரணங்களாலேயே தீடீரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக ஐ.தே.க. எம்.பியொருவர் தெரிவித்தார்.
ஐ.தே.கவின் விசேட மத்தியசெயற்குழுக் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிகொத்தவில் இன்று மாலை நடைபெறவிருந்தது. இதன்போது முக்கிய சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தன.
குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் தற்போது கூட்டணியாக இயங்கும் ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு மத்தியசெயற்குழு கடந்த வெள்ளியன்று அனுமதி வழங்கியது.
இதன்படிபுதிய அரசியல் கூட்டணியை, ‘தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது இன்று இறுதி முடிவெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், 2019 ஜனவரி முதல்வாரத்தில் மத்தியசெயற்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.