ஜனாதிபதி வெளிநாட்டில்! பிரதமர் – சபாநாயகர் கொழும்பில் இரகசியப் பேச்சு!! – சந்திப்பு முடிவடைந்த கையோடு கருவும் சுவிஸ் பறந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்றுப் புதன்கிழமை இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் நீடித்தது எனவும், சந்திப்பு முடிவடைந்த கையோடு சபாநாயகர் வெளிநாடு பறந்துவிட்டார் எனவும் அறியமுடிகின்றது.

2019 ஆம் ஆண்டுக்குரிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவ்வாண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனாதிபதியுடன் முரண்படாமல் ஆட்சியை முன்னெடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், இந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிரதமரை அவர் தனிப்பட்ட ரீதியில் சந்தித்தார் எனவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

எனினும், ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் அதற்கு அடுத்தபடியாக உயர் பதவிகளை வகிக்கும் இருவரும் இரகசியமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளமையானது மைத்திரி தரப்பை பலகோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *