25 மணி நேரம் கேட்வாக்; 230 மொடல்கள்: சென்னையில் நடந்த கின்னஸ் முயற்சி..!

பலரும் தங்களுக்கான மதிப்புமிகு அடையாளமாக மாற்றிக்கொண்டு வரும் துறை மொடலிங். இந்த நிலையில், மொடலிங் துறையில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக, மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில், நேற்று கின்னஸ் முயற்சி நடைபெற்றது.

இது தொடர்பாக அதில் பங்குபெற்ற மொடல் ஹீனா கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்றாடம் நிறைய ஃபேஷன் ஷோக்கள், ஷூட்கள் என்று எங்களுடைய மொடலிங் வாழ்க்கை நகர்கிறது. ஆனால், பல இடங்களில் சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு மொடலும் தனக்கான அங்கீகாரத்துக்காகவும் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறோம்.

எல்லாத் துறைகளிலும் இருப்பது போன்றுதான் மொடலிங்கிலும் மைனஸ்கள் இருக்கின்றன. ஆனால், மொடலிங் துறையில் மட்டுமே இருக்கிறது என்று கருதுகிற பெற்றோர்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்.

இது போன்ற கின்னஸ் சாதனைக்கான முயற்சி அந்த மன மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த முயற்சியில் ஆண், பெண், திருநங்கை என மொத்தம் 230 மாடல்கள் கேட் வாக் செய்தோம்.

கின்னஸ் சாதனைக்காக 25 மணி நேர கேட் வாக்குக்கு பிளான் செய்து இருந்தோம். அதற்குச் சராசரியாக 1,500 லேட்டஸ்ட் ஆடைகள் தேவைப்பட்டன. அதற்காக இந்தியா முழுவதும் உள்ள டிசைனர்கள் எங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தனர். மேக்கப் ஆர்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட் என எத்தனையோ பெண்கள் இந்தச் சாதனைக்காக உழைத்துள்ளனர்.

இது போன்ற முயற்சி மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கான அங்கீகாரம் என்றே இதைச் சொல்ல வேண்டும். இது கின்னஸ் ரெக்கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நல்ல அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்” – என்றார் மகிழ்ச்சியாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *