அமைச்சுப் பதவிக்காக மைத்திரியிடம் மண்டியிடேன்! – பொன்சேகா சூளுரை

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவிடம்  ஒருபோதும் மன்னிப்புகோரமாட்டேன் என்று பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா  தெரிவித்தார்.

மாவனல்லையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தம்மை விமர்சித்தமை மற்றும் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மன்னிப்பு கோருமாறு  ஜனாதிபதி என்னிடம் கேட்டார். அப்போதுதான்  அமைச்சுப் பதவி  வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதற்கு நான் உடன்படவில்லை.

செய்யாத –  நினைக்காத செயலொன்றுக்காக ஏன் மன்னிப்புகோர வேண்டும்.  ஜனாதிபதிக்கு எதிராக சதி  நடவடிக்கையில்  நான் ஈடுபடவில்லை. எனவே, மன்னிப்பு கோரவேண்டியதில்லை.” என்றும் பொன்சேகா கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *