ரயில்வே அதிகாரிகளுக்கிடையே முறுகல் – பொதிகள் தேக்கம்! பயணிகள் திண்டாட்டம்!!
ரயில் சேவையில் ( பெட்டிகளில் ) பொதிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமையினால் வியாபாரிகளும் பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர் .
கடந்த ஒரு வார காலமாக பதுளை தொடக்கம் கொழும்பு வரையிலான ரயில் நிலையங்களில் பொதிகள் தேங்கி கிடக்கின்றன.

ஹட்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பொறுப்பேற்கப்பட்ட பொதிகள் திருப்பி அனுப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவிப்பதுடன் , பண்டிகை காலத்தில் அசௌகரியத்திற்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா