கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட இலங்கை மக்கள் தயார் – களைகட்டியது வியாபாரம்!

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை (25) மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு இலங்கையிலும் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று இரவுவரை கொழும்பிலும் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு, வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு 12 மணியளவில்  இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *