பண்டிகைக் காலத்தில் சிக்னேச்சர் பருவகால வெகுமதிகள்!

பிரபலமான ஆண்கள் ஆடை வர்த்தகக் குறியீடாகத் திகழ்கின்ற சிக்னேச்சர், எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் அற்புதமான பண்டிகைக்கால வெகுமதியை வழங்குகின்றது.

‘அனைத்துப் பருவகாலத்திற்குமான ஆடவராக திகழுங்கள்’ என்ற தொனிப்பொருளை முன்கொண்டு செல்லும் விதத்திலும், சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவும் சிக்னேச்சர் ஆனது, இப் பருவகாலத்தை மிகவும் கொண்டாட்டமானதாகவும் மிகவும் சிறப்பானதாகவும் மாற்றியமைக்கும் பொருட்டு, ‘வண்ணத்தட்டினால்’ உயிர்ப்பூட்டப்பட்ட வடிவமைப்புக்களை இப் பண்டிகைக்காலத்தில் வழங்குகின்றது.

பழம்பெரும் சிக்னேச்சர் சேர்ட் வகைகள் இப்போது சுப்பர்-ஸ்லிம், ஸ்லிம்-ஃபிட் மற்றும்; பிளேயர்ஸ்-ஃபிட் என்ற மூன்று அளவுகளில் சந்தைக்கு வருகின்ற அதேநேரத்தில் சிக்னேச்சர் காற்சட்டைகள் அல்ட்ரா – ஃபிட் மற்றும் சுப்பர்-ஸ்லிம் ஆகிய இரு மாறுபட்ட அளவுகளில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன.

இப் புதிய ஆடைத் தெரிவுகள் கிறிஸ்மஸ் பற்றிய குதூகலமும் உற்சாகமும் பரவலடையும் உணர்வை அளிப்பதுடன், மிகப் பொருத்தமானதொரு பரிசாகவும் அமைகின்றது. இப் பண்டிகைக் காலத்தில் ஒரு தொடரிலான விலைக் கழிவுகள் மற்றும் கொடுக்கல்வாங்கல் வெகுமதிகளையும் சிக்னேச்சர் வழங்குகின்றது.

தனது பரந்த வகைகளிலான ஆடைத் தெரிவுகள் மேற்சட்டை, காற்சட்டை, சேர்ட்கள், டெனிம் வகைகள், ரீ-சேர்ட்கள் மற்றும் சப்பாத்துக்கள், இடுப்புப் பட்டிகள், கஃப்ளிங்க்ஸ் உள்ளிட்ட அணிகலன்கள் பலவற்றையும் வழங்குகின்றது. அதன்மூலம், எதிர்வரும் பருகால பண்டிகைகளை சிக்னேச்சர் வர்த்தகக் குறியீடானது உண்மையிலேயே உயிரோட்டமுள்ளதாக மாற்றியமைக்கின்றது.

முற்றுமுழுதாக உள்நாட்டில் உருவாகி வளர்ச்சி பெற்ற, தரமான ஆடைகள் மற்றும் அணிகலன்களை வழங்கும் வர்த்தகக் குறியீடான சிக்னேச்சர் ஆனது, ஆடவர் ஆடைகள் துறையில் ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், நட்சத்திர விளையாட்டு வீரர்கள் மற்றும் கூட்டாண்மைத் துறையினர் போன்றோரினால் அங்கீகரித்து ஆதரவளிக்கப்படும் ஒரு பிரபலமான வர்த்தகக் குறியீடாகவும் திகழ்கின்றது.

இவ் வர்த்தகக் குறியீடு இலங்கையின் நவநாகரிக அரங்கை வரையறுத்து, விஸ்தரித்திருக்கின்றது. சிக்னேச்சர் உற்பத்திகள் – நாடளாவிய ரீதியிலான 300 இற்கும் அதிகமான விநியோகஸ்தர் வலையமைப்பிற்கு மேலதிகமாக, லிபர்ட்டி பிளாஸா, மெஜஸ்டிக் சிற்றி பகத்தல வீதி, ஜா-எல, மாத்தறை, கல்முனை மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள அதனது பிரத்தியேக காட்சியறைகளிலும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *