சிறைச்சாலைக்குள்ளேயே ஹெரோயின் வைத்திருந்த கைதி மடக்கிப்பிடிப்பு!

மெகசின் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் 690 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேநேரம், 4 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாக,  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில், கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொரளைப்  பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொரளைப்  பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *