இ.தொ.கா. வெளியேறினால் அமைச்சுப் பதவியை துறப்பேன் – திகா அறிவிப்பு

”பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  உயர்வுக்காக அமைச்சுப் பதவியையும்  துறப்பதற்கு  தயாராகவே இருக்கின்றேன்.”- என்று  அமைச்சர் பழனி  திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில்  இன்று (23) நடைபெற்ற வரவேற்பு  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் கூறியதாவது,

” கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் , பேச்சுவார்த்தையிலிருந்து முதலில் வெளியேறவேண்டும்.  உடன்படிக்கையில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவேண்டும்.

இவ்வாறு நடைபெறுமானால் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் கைகோர்ப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம். அரசுக்கும், கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுக்கவும் தயார். தேவையேற்படுமனால் அமைச்சுப் பதவியையும் துறக்கதயார்.

அதேவேளை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு எதிராக புதிய அரசொன்றை உருவாக்கினார். ஆனால் அனைத்து கட்சிகளும் நீதிமன்றத்தை நாடியதினால் எமக்கு நீதி கிடைத்தது. அதனால் மீண்டும் நல்லாட்சி உதயமானது.” என்றார்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *