ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாரா? – மனோ கணேசன் சவால்

தேர்தல் கேட்டு ஓலம் இடுபவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கத் தயாரா என அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

அடுக்கடுக்காகத் தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை விரயம் செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், முதலில் ஜனாதிபதித் தேர்தலையே நடத்தவேண்டும் எனவும் கூறினார்.

தனது அமைச்சுப் பொறுப்புக்களை நேற்றுப் பொறுப்பேற்றார் மனோ கணேசன். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தலைச் சந்திக்க நாம் தயாராகவிருக்கின்றோம். ஆனால், தேர்தலை நடத்துவதற்குக் கால அட்டவணையொன்று காணப்படுகின்றது. வரையறையொன்று காணப்படுகின்றது.

ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதென்றால் அதற்கொரு விலை இருக்கின்றது. பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 500 கோடி ரூபா செலவாகும். இதனை யாரும் மறந்துவிடக் கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *