புறக்கோட்டைப் போராட்டத்துக்கு நாலாபுறங்களிலிருந்தும் வலுக்கிறது ஆதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், தலைநகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுதவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து – அப்புத்தளையில் பல இடங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தங்கமலை, இதல்கஸ்ஹின்ன, போவை ஆகிய தோட்டங்களிலேயே இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்படி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பட்டன.

அதேவேளை, புறக்கோட்டை போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து – மலையகத்தில் ஏனையப் பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

பதுளை நிருபர்

செல்வராஜா

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *