காலக்கெடு விதித்து போராட்டத்தை இடைநிறுத்தினர் மலையக இளைஞர்கள்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம்  இன்று (22) கைவிடப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு  முன்பாக கடந்த ஐந்து நாட்களாக மலையக இளைஞர்கள் மூவர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று அணிதிரண்ட மலையக இளைஞர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தினச் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என விண்ணதிர கோஷமெழுப்பினர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் – இன்று மதியம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

எதிர்வரும் பொங்கள் பண்டிகைக்க முன்னர் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும் என உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *