ஜனாதிபதி முன்னிலையில் இன்று 29 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! – சட்டம், ஒழுங்கு மைத்திரி வசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 29 பேர் பதவியேற்றுள்ளனர். சட்டம், ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தம்வசப்படுத்தியுள்ளார். ஏனைய புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு:-

1. ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் மற்றும் இளைஞர் விவகாரம்

2. ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்

3. காமினி ஜயவிக்கிரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி

4. மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம்

5. லக்ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில் முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி

6. ரவூப் ஹக்கீம் – உயர் கல்வி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

7. திலக் மாரப்பன – வெளிநாட்டலுவல்கள்

8. ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியம்

9. ரவி கருணாநாயக்க – மின் சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி

10. வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

11. ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு

12. பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி

13. நவீன் திஸாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை

14. பி.ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி

15. கபீர் ஹாசிம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி

16. ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவம்

17. கயந்த கருணாதிலக – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு

18. சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள்

19. அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்

20. பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி

21. சந்திராணி பண்டார – மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் உளர் வலய அபிவிருத்தி

22. தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

23. அகிலவிராஜ் காரியவசம் – கல்வி

24. அப்துல் ஹலீம் முஹமட் ஹசீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரம்

25. சாகல ரத்நாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி

26. ஹரீன் பெர்னாண்டோ – தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

27. மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள்

28. தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல்

29. மலிக் சமரவிக்கிரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *