ஐ.தே.கவில் இளைஞர்கள் இல்லையா? ரணிலை சீண்டுகிறார் நாமல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டின்கீழ் இளைஞர் விவகார அமைச்சு கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவியேற்றது. இதன்போது தேசிய கொள்கை, பொருளாதார, தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக அமைச்சரவையை நியமிப்பதை விடுத்து தமது கட்சி உறுப்புரிமை பற்றி பேசி ஐக்கிய தேசிய கட்சியினர் கால விரயம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *