ஹிஜாப்பை கழற்ற மறுத்த இளம்பெண்ணுக்கு பரீட்சை எழுத அனுமதி மறுப்பு!

கோவாவில் ஹிஜாப்பை கழற்ற மறுத்த இளம்பெண் நெட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டார்.கோவாவில் பல்கலை கழக மானிய குழுவால் (யூ.ஜி.சி.) நடத்தப்பட்ட நெட் தேர்வு எழுதுவதற்கு கடந்த 18ந்தேதி சபீனா கான் சவுடாகர் (வயது 20) என்ற இளம்பெண் சென்றுள்ளார்.  தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்யும் நடைமுறைகளுக்காக அவர் வரிசையில் நின்றுள்ளார்.

இவரது ஆவணங்களை சோதனை செய்த அதிகாரி பின்னர் ஹிஜாப்பை கழற்றும்படி கூறியுள்ளார்.  இது தனது மத நம்பிக்கைக்கு எதிரானது என கூறி அதனை கழற்ற சவுடாகர் மறுத்துள்ளார்.  ஆண்கள் பலர் சுற்றி இருக்க ஹிஜாப்பை கழற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அவரை தேர்வு எழுத அதிகாரி அனுமதிக்கவில்லை.  இதுபற்றி கூறிய சவுடாகர், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பொழுது வலைதளங்களில் விதிகளை படித்தேன்.  அதில் ஹிஜாப் பற்றியோ அல்லது உடை கட்டுப்பாடுகள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை என கூறினார்.
இதுபற்றி பனாஜியின் உயர்கல்வி இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, மோசடியை தவிர்க்க ஹிஜாப் மட்டுமின்றி மங்கலநாண் (திருமணமான இந்து பெண்கள் அணியும் தாலி) அல்லது வேறு எந்த பொருளும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறினார்.
அவர் தொடர்ந்து, தேர்வு மிக வெளிப்படையான முறையில் நடைபெற உறுதி செய்யும் வகையில் கடுமையான விதிகள் யூ.ஜி.சி.யால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.  அதகாரிகள் அதனையே பின்பற்றுகின்றனர் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *