சன்சில்க் ரமணி பெர்னான்டோ ஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா !

இலங்கையின் பெண்களின் அழகையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நாமமான சன்சில்க், பல தலைமுறைகளை நீண்ட அடர்த்தியான பட்டுப் பொன்ற மிருதுவான கூந்தலுடன் திகழ வைப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனைக் கொண்டாடும் வகையில், ரமணி பெர்னான்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியுட்டி அகடமி தனது 13 ஆவது பட்டமளிப்பு நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கொழும்பின் முன்னணி நவநாகரிக ஆர்வலர்கள் மற்றும் கூந்தல் அலங்கார நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வியகத்திடமிருந்து 200க்கும் அதிகமான மாணவர்கள் இதன் போது சன்சில்க் மற்றும் ரமணி பெர்னான்டோ சலோன்ஸ் அங்கிகாரத்துடனான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். இந்த பட்டமளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட ‘ர்யசை யுசவ 2018’ நிகழ்வு இடம்பெற்றது.

 

இதன் போது, கொழும்பு, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரமணி பெர்னான்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியுட்டி கல்வியகங்களைச் சேர்ந்த 10 மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த 15 வருடங்களாக இயங்கும் ரமணி பெர்னான்டோ ஹெயார் அன்ட் பியுட்டி சலோன், கூந்தல் மற்றும் அழகியல் நிபுணத்துவம் கொண்ட உயர் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய கூந்தல் பராமரிப்பு பட்டதாரிகளை உறுதியாக உருவாக்கிய வண்ணம் உள்ளது. இலங்கையில் காணப்படும் பிரபல்யம் பெற்ற சலோன் வர்த்தக நாமங்களில் ஒன்றாக விளங்கும் ரமணி பெர்னான்டோ சலோன்ஸ் உடனான பங்காண்மை பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,

யூனிலீவர் நிறுவனத்தின் நம்பிக்கையை வென்ற முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான சன்சில்க் உடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மை அதிகளவு வெற்றிகரமானதாகவும் அமைந்துள்ளது.

ஆர்வமுள்ள கூந்தல் மற்றும் அழகியல் மாணவர்களை வலுவூட்டுவது மற்றும் அதன் சமூக நலனில் காண்பிக்கும் அக்கறையை மேலும் உறுதி செய்யும் வகையில் கல்வியகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 24 புலமைப்பரிசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.


இந்த நிகழ்வு தொடர்பில் யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் பிரத்தியேக பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நிலூஷி ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில்,

“ரமணி பெர்னான்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அகடமியில் தமது கற்கையை பூர்த்தி செய்த திறமைகள் மற்றும் ஆளுமைகள் படைத்த மற்றுமொரு இளம் பட்டதாரிகளை காண்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ரமணி பெர்னான்டோ சலோன்ஸ் உடன் நாம் கொண்டுள்ள பங்காண்மையை மேலும் நான் உறுதி செய்வதுடன், கூந்தல் மற்றும் அழகியல் துறையில் இந்த இளம் பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு அவர்களை நிபுணத்துவம் வாய்ந்த வகையில் தயார்ப்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் கூந்தல் பராமரிப்பு தேவைகiளை நிவர்த்தி செய்வதற்காக, சன்சில்க் தன்வசம் பரந்தளவு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தெரிவுகளை கொண்டுள்ளது.

இலங்கையின் அழகியல் துறைக்கு பிரத்தியேகமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய நிபுணர்களை உருவாக்குவதனூடாக, பெண்களுக்கு வலுவூட்டுவது, வாழ்வாதாரங்களை உருவாக்குவது மற்றும் திறன்களை கட்டியெழுப்புவது போன்ற செயற்பாடுகள் இந்த நிலையத்தினூடாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக எமது பெறுமதி வாய்ந்த நுகர்வோர்களுக்கு பெறுமதி சேர்ப்பதனூடாக, நாட்டின் கூந்தல் மற்றும் அழகியல் துறைக்கு சன்சில்க் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குவதையிட்டு பெருமை கொள்கிறது.” என்றார்.

ரமணி பெர்னான்டோ சலோன்ஸ் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமணி பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “அழகியல் போக்குகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த வண்ணமுள்ள நிலையில், கூந்தல் மற்றும் அழகியல் நிபுணர்களுக்கு, சந்தையின் புதிய போக்குகள் தொடர்பான உலகத் தரம் வாய்;ந்த பயிற்சிகளை பெற்;றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். சன்சில்க் உடன் கைகோர்த்து, நாம் கூந்தல் மற்றும் அழகியல் துறை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் அறிவை ஆர்வமுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்குகிறோம். துறையில் நீண்ட தூரம் நம்பிக்கையுடன் பயணித்து வெற்றிகரமாக இயங்கும் நிபுணர்களாக திகழக்கூடிய ஆற்றல் படைத்த இந்த பட்டதாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *