இலங்கையில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு! அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று வெளியிட்டுள்ள ‘ருவிட்டர்’ பதிவு ஒன்றில்,

“இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட, இந்த வார அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது. இலங்கை, இந்தோ-பசுபிக்கின் பெறுமதியான பங்காளராக இருக்கின்றது.

இலங்கை அரசு மற்றும் மக்களுடனான எமது உறவுகளைத் தொடர்ந்து முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“இலங்கையின் உறுதியான நண்பர்கள் என்ற வகையில், அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாக இந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்.

இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை நாங்கள் பாராட்டுகின்றோம். தேசிய நல்லிணக்கம், அனைவருக்குமான செழிப்பு ஆகியவற்றை நோக்கி நகர்வுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *