சச்சினின் சாதனையை சமன் செய்த கோஹ்லி!

ஆஸ்திரேலிய மண்ணில் 6 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்தது. இதையடுத்து, பேர்த் மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.

பின்னர், 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது.

தொடக்க வீரர்கள் முரளி விஜய் ஓட்டம் எதனையும் எடுக்காமலும், ராகுல் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அதன் படி வெறும் 8 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை விராட் கோஹ்லி சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.

2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 181 பந்துகளைச் சந்திந்து 82 ஓட்டங்களுடன் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் இருந்தார். 3ஆம் நாள் ஆட்டத்தில், விராட் கோஹ்லி 214 பந்துகளில் தனது 25ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்தார். முன்னதாக, சச்சின் 6 சதங்கள் அடித்திருந்தார். தற்போது அவரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இவர்கள் இருவரைத் தவிர வேறுயாரும் 6 சதங்களை இதுவரை அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *