சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – சம்பிக்க திட்டவட்டம்

“சுமார் 50 நாட்களாக நாட்டை உலுக்கிய அரசியல் சதித் திட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் சதித் திட்டத்துக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமளியோம்.”

– இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“இராஜதந்திர ரீதியில் -ஜனநாயக வழியில் போராடிய ஐக்கிய தேசிய முன்னணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் புகழாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. நீதியின் வழியில் பிரதமர் கதிரையில் அவர் மீண்டும் அமர்ந்துள்ளார்.

நாட்டில் மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசு மீண்டும் மலர்ந்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் ஒற்றுமையாக – ஓரணியில் நின்று நல்லாட்சி தொடர தங்கள் பங்களிப்புகளை வழங்குவார்கள். கடந்த காலத்தில் நாம் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம். அரசியல் சதித் திட்டத்துக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமளியோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *