போராளிகள் கட்சிப் பேச்சாளர் துளசி விசாரணைக்கு அழைப்பு!

ஐனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக நெடுங்கேணி சேனப்பிளவில் வசிக்கும் துளசியை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு நேற்றுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் என்ன காரணத்துக்காக விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார் என்பது தொடர்பில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை, இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்காகத் துளசியை அழைத்து சில மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோன்று ஐனநாகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *