பதவியை விட்டு விலகினாலும் நாட்டை மீட்கப் போராடுவேன்! – மஹிந்த சூளுரை

“நான் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டை மீட்பதற்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடமாட்டேன்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிக​ழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *