ஓர் இரவுக்கு ரூபா 2 இலட்சம்: அதிர்ச்சியடைந்த காயத்ரி தக்க பதிலடி

மலையாள ஆசியன் நெட் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண். அங்கு தனக்கென தனி இரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் அருண் என்பவரை சில ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அக்குழந்தையுடன் செய்த டப்மேஷ் ஒன்றின் மூலம் இன்னும் பிரபலமானார்.

இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுக்கு கொமண்ட் செய்த இரசிகர் ஒருவர், மிகவும் ஆபாசமாக பேசியதோடு மட்டுமில்லாமல், ஓர் இரவுக்கு 2 இலட்சம் ரூபா தருகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான காயத்ரி, “உங்கள் அம்மா, தங்கை நலமாக இருக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன்” எனப் பதில் அனுப்பி அனைவரினதும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *