இலங்கையின் ஜனநாயகத்துக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி! – சர்வதேச அரங்கில் மைத்திரி – மஹிந்தவை கடுமையாகச் சாடி வந்த சமந்தா தெரிவிப்பு

இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றால்தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக நேற்று மாலை, தகவல் வெளியானதை அடுத்தே, அவர், இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றால் தான், இது நடந்திருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர், “இது இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார்.

“இதிலிருந்து மைத்திரிபால சிறிசேன செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிளவுகள் ஆழமாக முன்னர் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கி நகர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ‘ருவிட்டர்’ பதிவுகளில் சமந்தா பவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கையில் அரசியல் சதி முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து மைத்திரி – மஹிந்த கூட்டணியை சமந்தா பவர் கடுமையாகச் சாடி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *