முகமூடி அணிந்துசென்று காதலியை தாக்கிய காதலன் ! பரீட்சை மண்டபத்துக்குள் பயங்கரம்! சினிமாப் பாணியில் மொனராகலையில் சம்பவம்!

பரீட்சை நிலையத்திற்குள் முகமூடியணிந்துக்கொண்டு புகுந்த இரு இளைஞர்கள்,சாதாரண தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியைத் தாக்கி, கத்தியினால் குத்த முயற்சித்த சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை  நக்கல ராஜயானந்த மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்திலே, சினிமாப் பாணியில் மேற்படி சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவியைத் தாக்கிவிட்டு, தப்பியோடிய இரு இளைஞர்களைத் தேடி, மொனராகலைப் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, இரு இளைஞர்களில் ஒருவர் குறித்த மாணவியுடன் காதல் கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது.

இக்காதலை மாணவியின் பெற்றோர் எதிர்த்ததினால், காதல் முறிந்தது. இதையடுத்து, ஆத்திரம் கொண்ட இளைஞன், தனது நண்பனுடன் சென்று, மாணவியைத் தாக்கியமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தின் போது, குறிப்பிட்ட பரீட்சை நிலையம், பெரும் பதட்டத்துடன் கூடிய அல்லோலம் ஏற்பட்டது.

பதுளை நிருபர் – எம்.செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *