‘இவனுக்கு எங்கேயோ மச்சம்’- தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை! ஆண்கள் தெறித்து ஓட்டம்!!

மதுரையில் இவனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் ஓடும் தியேட்டருக்குள் புகுந்து போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழித்தனர் மாதர் சங்கத்தினர்.

விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்றும், பெண்களை கேலி செய்யும் வசனங்களும் நிறைய உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்பிளக்ஸுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். காம்பிளக்ஸில் ஒட்டியிருந்த விமல் பட போஸ்டர்களை செருப்பால் அடித்ததுடன் கிழித்து எறிந்தனர்.

இந்த ஆபாச படத்திற்கு உடனே தடை விதிக்கக் கோரி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தவர்களிடம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். பெண்களின் ரகளையால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. மாதர் சங்க போராட்டத்தால் தியேட்டரில் படம் பார்த்த ஆண்கள் இடத்தை காலி செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *