திருமண விளம்பரத்தால் நட்பான நபர் – பெண் மருத்துவருடன் பல முறை உல்லாசம்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில்   பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் முக்கிய பத்திரிகைகளில் வரன் கேட்டு திருமண விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி என ராமமூர்த்தி என்பவர் குறித்த மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.சிறிது நாட்களில் சமூக வலைதளங்கள் வாயிலாக இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறியுள்ளனர். இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் நடசத்திர ஹொட்டல் ஒன்றில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்.

அப்போது சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு தேவை எனில் தம்மை அணுகலாம் எனவும், உறவினர்களுக்கு எவருக்கேனும் உதவி தேவை என்றாலும் தயங்காமல் கேட்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி, குறித்த மருத்துவரை தமக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வேலை வாங்கித்தர பலருக்கும் பணம் தர வேண்டி இருப்பதால், தேவையானவர்களிடம் இருந்து பணம் வாங்கித் தர வேண்டும் எனவும் அந்த மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுகாதாரத்துறையில் வேலை வேண்டும் என கூறிய சில உறவினர்களிடம் இருந்து சுமார் 3 மில்லியன் ரூபாய் அளவுக்கு பணம் திரட்டி அளித்துள்ளார்.இதனிடையே தனியாக ஹொட்டல் அறைகளில் சந்தித்துக் கொண்ட இருவரும் பல முறை உடல் உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.கடந்த நவம்பர் 20 ஆம் திகதி ஹொட்டல் ஒன்றில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அதன் பின்னர் 22 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளலாம் எனவும்,

பதிவுத்துறை அலுவலகத்தில் நண்பர்களுடன் வருவதாகவும் மருத்துவரிடம் அந்த நபர் உறுதி அளித்துள்ளார்.ஆனால் 20 ஆம் திகதி இரவு முதல் அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவருக்கு தெரியவந்துள்ளது.தொடர்ந்து மருத்துவர் மேற்கொண்ட விசாரணையில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறையில் ராமமூர்த்தி என்ற பெயரில் எவரும் பணியில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, குறித்த நபரின் பெயர் ராமமூர்த்தி அல்ல எனவும் போலியான ஆவணங்களை பயன்படுத்தி தம்மை ஏமாற்றியதும் மருத்துவருக்கு தெரியவந்துள்ளது.மொத்தம் 2 மில்லியன் ரூபாய்க்கு மேல் உறவினர்களிடம் இருந்தும் தம்மிடம் இருந்த 4 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தம் 3 மில்லியன் தொகையை அந்த நபர் ஏமாற்றியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *