லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் கொலை

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
லிபிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் அதிபர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.
கடந்த பிப்ரவரியில், ஜப்ரா நகரில் உள்ள சோதனை சாவடி மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  சோதனை சாவடி அழிக்கப்பட்டது.  பல வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் லிபியாவின் மத்திய நகரான ஜப்ராவின் பியுகா பகுதியில் 10 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே ஜப்ரா நகர மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அவர்களில் 6 பேரை கொன்று விட்டோம் என தீவிரவாதிகள் தெரிவித்து உள்ளனர்.  இந்த தகவலை ஜப்ராவின் டீன் ஹசூனா உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
கடந்த அக்டோபரில் ஜப்ரா நகரின் பியுகா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று இருந்தனர்.  ராணுவ வீரர்கள் பலரை கொன்றும், பலரை பிடித்து சென்றும் மற்றும் அவர்களது வீட்டை எரித்தும் உள்ளோம் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *