நீதிமன்றத்தின் ஊடாக ஐ.தே.க. சண்டித்தனம்! – எதற்கும் அஞ்சமாட்டோம் என மஹிந்த அணியினர் ஆவேசம்

“எமது பலத்தை எதிர்கொள்ள முடியாத ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் நீதிமன்றங்களில் எமக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து சண்டித்தனம் காட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் நாம் அஞ்சமாட்டோம்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“உயர்நீமன்றத்தின் தீர்ப்பு எமக்குச் சாதகமாக அமைந்தால் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நாம் மீண்டும் ஆட்சியமைப்போம். தீர்ப்பு எமக்குப் பாதகமாக அமைந்தால் பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் நிரூபித்துக் காட்டிவிட்டு ஆட்சியமைப்போம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அதுவரைக்கும் நாம் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டோம்” -என்று தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *