சமுர்த்தி அலுவலர்களுக்கு வவுனியாவில் செயலமர்வு!

வன்னி மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்களுக்கான செயலமர்வும் பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் மூலம் மக்களுக்குப் பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி தலைமைப்பீடத்தில் இருந்து வருகை தந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *