சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்! – வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

சமாதானத்துக்குத் குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் எனத் தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.

மீண்டும் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம் என்ற சொல்கூட எமது நாட்டுக்கு வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தைக் காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன, வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் உட்படப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *