ரணிலுக்கு ஆதரவாக பிரேரணை! 12 ஆம் திகதியும் சபை அமர்வை புறக்கணிக்கிறது மஹிந்த அணி!
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, 12 ஆம் திகதியும் நாடாளுமன்ற அமர்வை மஹிந்த அணி புறக்கணிக்ககூடும் என தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடவுள்ள நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
” சபாநாயகர் கருஜயசூரிய எல்லைமீறி செயற்படுவாரானால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த யோசனைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.